Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் வைத்தியசாலைகளில் பாரிய முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருவதாக, திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந்த தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் டொக்டர் லதாகரனின் வழிகாட்டலின் கீழ் அனைத்து வைத்தியசாலைகளிலும் கொரோனா நோயாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வைத்தியசாலைகளில் மட்டுமல்லாது, பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களுக்கு சென்று அறிவுறுத்தல்களையும் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் கிராமப்புற வைத்தியசாலைகளிலும் பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முகக் கவசங்கள், பாதுகாப்பான ஆடைகள் போன்றவற்றை வழங்கி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும், 10 நிமிடத்துக்கு ஒரு முறையாவது கைகளை சவுக்காரம் குட்டி சுத்தப்படுத்தும்மாறும், சமூக இடைவெளிகளை பேணுமாறும் சுகாதாரத் திணைக்களம் கோரிக்கை விடுக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025