2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கோமரங்கடவல பொலிஸ் நிலையம் திறந்துவைப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை - கோமரங்கடவல  பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பொலிஸ் நிலையம், கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வாவால் உத்தியோகபூர்வமாக இன்று (15) திறந்துவைக்கப்பட்டது.

கோமரங்கடவல பொலிஸ் நிலையம், உள்நாட்டு யுத்தத்தின் போது  சேதமாக்கப்பட்டு, மீண்டும் தனியார் காணியொன்றில் எவ்விதமான வசதிகளுமின்றி இயங்கி வந்தது.

இதனையடுத்து, பிரதேச செயலகத்தால் பொலிஸ் நிலையம் அமைப்பதற்கான காணி வழங்கப்பட்டதுடன், புதிதாக பொலிஸ் நிலையமொன்றை அமைப்பதற்கு 250 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .