2025 மே 14, புதன்கிழமை

கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில், சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறுப்பட்ட வேலைத் திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், வாழைச்சேனை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு, வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாழைச்சேனை கால்நடை வைத்திய அதிகாரி திருமதி.யூ.ஜி.ஏ.எம்.உடநலத்த தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராசசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், மேலும் அதிதிகளாக கால் நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.மதனசேகரன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது,  34 பயனாளிகளுக்கு 250 ரூபாய் பெறுமதியான ஒரு மாதகால நாட்டுக் கோழிக் குஞ்சுகள், தலா இருபது வீதம் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X