Suganthini Ratnam / 2016 மார்ச் 11 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் சித்த மருத்துவபீட மாணவர்கள் ஒன்பது பேர் நேற்று வியாழக்கிழமை இரவு தாக்குதலுக்குள்ளான நிலையில் நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவபீடத்தினுள் நுழைந்து தம்மை தாக்கியதாக தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் தெரிவித்தனர்.
திருகோணமலையைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் கல்முனையைச் சேர்ந்த ஒரு மாணவனும் அக்கரைப்பற்றைச் சேர்சந்த இரண்டு மாணவர்களும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு மாணவனும் நீலாவணையைச் சேர்ந்த ஒரு மாணவனும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு மாணவனும் நாவலப்பிட்டியவைச் சேர்ந்த ஒரு மாணவனுமே தாக்குதலுள்ளானார்கள்.
தங்களுக்கிடையில் நீண்ட நாட்களாக இருந்துவந்த பகை முற்றியதன் காரணமாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
11 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago