2025 ஜூலை 26, சனிக்கிழமை

செயலமர்வுக்காக ஜேர்மனிக்குப் பயணமாகிறார் பிரதம செயலாளர்

Thipaan   / 2016 ஒக்டோபர் 22 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

ஜேர்மனி நாட்டின் பிரபல பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள மாற்று சக்தி வளப்பயன்பாடு தொடர்பான செயலமர்வுக்காக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபே குணவர்தன, இன்றிரவு (22) ஜேர்மனிக்குப் பயணமாகவுள்ளதாக, பிரதம செயலக அலுவலக பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

மாற்று சக்தி வள பயன்பாட்டை ஜேர்மனி எவ்வாறு அதனை கையாளுகின்றது என்பது பற்றிய அறிவினை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் ஒரு வார பயிற்சிக்காக செல்லவுள்ளதாகவும் கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான செயற்றிட்டங்களை ஆரம்பித்து செயற்படுத்துவது தொடர்பாக ஆராயவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X