Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
திருகோணமலை, சேருநுவரவிலிருந்து கொழும்புக்கான பஸ் சேவை இலங்கை போக்குவரத்துச் சபையின் வாகரை டிப்போவினால் நேற்று திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 07 மணிக்கு சேருநுவரவிலிருந்து புறப்படும் பஸ் வாகரை ஊடாக வாழைச்சேனை நகரை வந்தடைந்து அங்கிருந்து மாலை 04 மணிக்கு கொழும்பைச் சென்றடையும். அவ்வாறே தினமும் மாலை 04 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் பஸ் அதே வழியாக சேருநுவரவை நள்ளிரவு 12 மணிக்குச் சென்றடையும்.
சேருநுவரவிலிருந்து கொழும்புக்கு 396 ரூபாவும் வாகரையிலிருந்து கொழும்புக்கு 353 ரூபாவும் ஒருவழிக் கட்டணமாகும்.
பயணிகளின் நன்மை கருதி இச்சேவையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் வாகரை டிப்போ முகாமையாளர் வி.மகேந்திரராஜா தெரிவித்தார்.
9 minute ago
17 minute ago
26 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
26 minute ago
38 minute ago