Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் புராதன வடிவமைப்புச் சிலை வேலை செய்வதற்காக இந்தியாவிலிருந்து வந்த ஒருவர்; தாக்குதலில் காயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாகை மாவட்டத்தின் வேதாரஞ்சம் பகுதியைச் சேர்ந்த எஸ்.காளிஸ்வரன் (வயது 29) என்பவரே திங்கட்கிழமை (28) இரவு தாக்குதலுக்குள்ளானார்.
வேலை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் கைலகப்பாக மாறியதாகவும் இதன்போது, சிற்ப வேலைக்காக உதவியாளராக தன்னுடன் இருந்த இலங்கையர் ஒருவரே தன்னைக் கடித்துக் காயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
10 minute ago
18 minute ago
27 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
27 minute ago
39 minute ago