Princiya Dixci / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
6 வயதுடைய சிறுமியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 16 வயதுடைய சிறுவனை, எதிர்வரும் 19ஆம் திகதி வரை, மீண்டும் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வைக்குமாறு மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான், நேற்று (06) உத்தரவிட்டார்.
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாங்கேணிப் பகுதியில் கடந்த செப்டெம்பர் மாதம் 08ஆம் திகதி, குறித்த சிறுமி கொலைசெய்யப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள், சம்பூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு பொலிஸாரும் பொது மக்களும் தேடுதல் நடத்திய போது, சிறுமி காட்டுக்குள் கொலை செய்யப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் அன்றைய தினமே சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவ தினத்தன்று, குறித்த சிறுவன் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026