Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 நவம்பர் 03 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் நீலாங்கேணியில், ஆறு வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரின் தடுத்துவைக்கப்பட்ட சிறுவனை, இம்மாதம் மாதம் 17ஆம் திகதி வரை சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்குமாறு, மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், இன்று வியாழக்கிழமை (03) உத்தரவிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த செப்டெம்பர் மாதம் 08ஆம் திகதி வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஜெகதீஸ்வரன் அஜந்தா எனும் சிறுமியைக் காணவில்லையென, பெற்றோரால், சம்பவ தினத்தன்று சம்பூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டையடுத்து, பொலிஸாரும் பொது மக்களும் சேர்ந்து தேடுதல் நடாத்திய போது, சிறுமி காட்டுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில், 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டு, மூதூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .