Gavitha / 2016 நவம்பர் 21 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு
2012ஆம் ஆண்டில், திருகோணமலை - தோப்பூர் பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில், திருகோணமலை உயர்நீதிமன்றத்தினால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு தலைமறைவாக வாழ்ந்து வந்தவர், நான்கு வருடங்களின் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுப்பிரமணியம் கேதீஸ்வரன் (வயது 30) என்பவரே இவ்வாறு திருக்கோவில்-4ஆம் கிராமத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (20) மாலை திருக்கோவில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குறித்த நபருக்கு திருகோணமலை உயர் நீதிமன்றம் 12 வருட சிறைத் தண்டனையும், 10 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட அதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நட்டஈடாக ரூபாய் 50 ஆயிரம் வழங்குமாறும் உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளிக்கபட்டு திறந்த பிடியாணையின் மூலம் குறித்த நபர் தேடப்பட்டு வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
22 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
41 minute ago