2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழ புதிய அரசியலமைப்பு வழிவகுக்கும்

Princiya Dixci   / 2016 ஜூன் 16 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

'தேசிய கீதத்தில் கூறப்பட்டுள்ளவாறு, இலங்கை மக்கள் அனைவரும் ஒரு தாயின் மக்கள். அனைவரும், இந்த நாட்டில் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழ்வதற்கு வருகின்ற புதிய அரசியலமைப்பு வழிவகுக்கும் விதத்தில் அமைய வேண்டும்' என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் விசேட செயற்றிட்டமான நஞ்சற்ற நாடு செயற்றிட்டத்தின், நிலையான அபிவிருத்திக்கான சேதன முறையிலான பயிர்ச்செய்கை எனும் விழிப்புணர்வு நிகழ்வு, திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி அரங்கில் புதன்கிழமை (15) இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

'நாட்டில் முதன் முதலாக தேசிய அரசாங்கம் ஒன்று மகிழ்ந்ததும் மலர்ந்ததும் கிழக்கு மாகாணத்தில் தான். தேசிய கீதம், தமிழிலும் சிங்களத்திலும் முதலில் ஒலித்த மாகாணமும் கிழக்கு மாகாணமே. எனவே, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ  விவேகமானவர். அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராகவும் உள்ளதால், நல்லிணக்கம் சார்ந்த பல விடயங்கள், கிழக்கில் இருந்து அரசாங்கத்துகுப் போயிருக்கும் என நான் நம்புகிறேன்.

மேலும், ஒரு நாட்டின் நல்லாட்சி, ஒளவையார் கூறிய வரப்பு உணர்வதிலே தங்கியுள்ளது. அவ்வாறானதோர் உயரிய விவசாயத் தொழிலை, இன்று நஞ்சை உட்கொள்ள வைக்கும் தொழிலாக வியாபாரிகள் வியாபார நோக்கத்துக்காக மாற்றியுள்ளனர்.

இதனால், மனித வாழ்வில் அன்றாடம் எத்தனையோ புதிய நோய்களுக்கு நாம் ஆளாகி வருகின்றோம். இதனை மாற்றி இனி வரம் நாட்களில் நஞ்சற்ற நாடாக எமது நாட்டை மாற்ற வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X