தீஷான் அஹமட் / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கை காட்டுப்பகுதியில் மணல் அகழ்வு அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர், நேற்றிரவு (24) கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் டிப்பர் வாகனங்கள் ஐந்தும் கைப்பற்றப்பட்டுள்ளனவெனவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட ஐவரும், கொழும்புப் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
மூதூர் கங்கை சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக மூதூர் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் சுற்றி வளைப்பினை மேற்கொண்டதாக மூதூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனரென்பதுடன், இவர்களை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை, மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago