2026 மார்ச் 19, வியாழக்கிழமை

சட்டவிரோத மீன்பிடி; ஒருவர் கைது

தீஷான் அஹமட்   / 2017 ஒக்டோபர் 14 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டி கடற்பரப்பில் டைனமைட்டைப் பயன்படுத்தி, சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த 54 வயதுடைய மீனவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து கப் வாகனமொன்று, மீன்பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், 375 கிலோகிராம் மீன்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக, சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புத்திக்க ராஜபக்ஷ தெரிவித்தார்.

மீன்களை, படகிலிருந்து கப் வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருக்கும் போது,  சம்பூர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பையடுத்து, குறித்த மீனவர் கைதுசெய்யப்பட்டாரெனவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, படகைக் கைப்பற்ற முற்பட்ட போது, படகிலிருந்த போட்டிலிருந்த மீனவர்கள் மூவர், படகுடன் தப்பித்துச் சென்றுள்ளனரெனவும் அவர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட மீனவரை, மூதூர் நீதவான் முன்னிலையில்  ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X