Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 பெப்ரவரி 21 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, தோப்பூர் உப பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோப்பூரில் சதொச மொத்த விற்பனை நிலையமொன்றை ஏற்படுத்தித்தருமாறு, இங்குள்ள பொதுமக்கள், உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
தோப்பூர் மற்றும் அதனையண்டிய பகுதியில் சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இதுவரை இங்கு சதொச விற்பனை நிலையமொன்று திறந்துவைக்கப்படவில்லை. இதனால் இங்குள்ள பொதுமக்கள், கூடுதலான விலை கொடுத்து தனியார் வர்த்தக நிலையங்களிலேயே பொருட்களை கொள்வனவு செய்யவேண்டியிருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.
நியாய விலைகளில் தரமான பொருட்களை, பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, சதொச விற்பனை நிலையங்களின் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளை இம்மக்களும் பெற்றுக்கொள்ளும் பொருட்டும் தோப்பூரிலும் சதொசநிலையமொன்றை நிறுவ வேண்டுமென்பதே, இங்குள்ள மக்களினது கோரிக்கையாகும்,
தோப்பூரில் இதனை திறப்பன் மூலமாக தோப்பூர் மட்டுமின்றி இதனை அண்மித்திருக்கின்ற சேருவில, வெருகல், பள்ளிக்குடியிருப்பு பாட்டாளிபுரம் உப்பூறல் உள்ளிட்ட அநேகப் பிரதேசங்களிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் இது வசதியாக அமையுமெனவும் குறிப்பிடுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago