2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

சமூகத் தலைவர்களை விழிப்பூட்டும் செயலமர்வு

Thipaan   / 2016 ஜூன் 27 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், ஒலுமுதீன் கியாஸ், தீசான் அஹமட்

சர்வதேச சித்திரவதைக்கு எதிரான தினத்தையொட்டி, 'மனிதகுலத்தின் பெருமையை மதிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் சமூகத் தலைவர்களை விழிப்பூட்டும் செயலமர்வு, திருகோணமலை குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் கிழக்கு மாகாண பிராந்திய நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எஸ்.சதீஸ்குமார் தலைமையில், திருகோணமலை நகராட்சி மன்ற குளக்கோட்டன் மண்டபத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை(26) நடைபெற்றது.

சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டு மீள்எழுந்து வாழ்கின்ற மக்களுக்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக சமூக மட்டத்தில் விழிப்பூட்டி அவைகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விழிப்பணர்வு நிகழ்வுக்கு வளவாளர்களாக வைத்தியர் ஞானகுனாளன், சட்டத்தரணி எஸ். திருசெந்தில்நாதன், சிரேஷ்ட ஊடகவியலாளர் பொ. சற்சிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டதோடு, அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பொலிஸார் சிறைச்சாலை அதிகாரிகள் உட்படபலர்  இந்நிகழ்வில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .