2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சமுர்த்தி நிதி மோசடி; விசாரணை ஆரம்பம்

Editorial   / 2020 ஜூன் 02 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், கீத்

தம்பலகாமம் சமுர்த்தி வங்கியில் இடம்பெற்ற நிதி மோசடியை மறைப்பதற்காக, குறித்த வங்கியில் கணக்குள்ள வெளிநாட்டில் பணிபுரிகின்ற சமுர்த்திப் பயனாளிகளின் கணக்குகளிலுள்ள பணத்தை மோசடியாக பெற்று, பற்றாக்குறையை மீள் நிரப்பியமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, திருகோணமலை மாவட்டச் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன, இன்று (02) தெரிவித்தார்.

இரண்டு இலட்சம் ரூபாய் நிதி மோசடியை மறைக்கவே, வெளிநாடுகளில் உள்ள சமுர்த்திப் பயனாளிகளின் கணக்குகளில் காணப்படும் 2 இலட்சம்   ரூபாய் பணத்தை மோசடியாகப் பெற்றுள்ளதாக, மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

இவ்வாறு இரு மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இவை தொடர்பில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.சிறீபதி, மாவட்டச் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்ததுக்கு அமைய, விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பலர் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்த மோசடி தொடர்பில், கணக்காய்வு செய்வதற்காக, இவ்விடயத்தை மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வுப் பிரிவுக்குப் பணித்துள்ளதாக, மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .