2025 மே 19, திங்கட்கிழமை

சமூக இடைவெளியைப் பேணி பொருள்கள் கொள்வனவு

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

திருகோணமலை மாவட்டத்தில், ஊரடங்குச்சட்டம் இன்று (20) தளர்த்தப்பட்ட நிலையில் திருகோணமலை, மூதூர், கிண்ணியா, முள்ளிப்பொத்தானை, சேருவில,வெருகல், குச்சவெளி பிரதேசங்களில் சமூக இடைவெளியை பேணி மக்கள் பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர் என்று, தெரிவிக்கப்படுகிறது.

சதொச உள்ளிட்ட முக்கிய வியாபார நிலையங்களில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர் போக்குவரத்துகள் சுமூகமாக இடம்பெற்று வருவதாகவும் ஆனால் மக்கள் மிக குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளியைப் பேணி கொள்வனவு செய்தனர் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் உள்ளூராட்சி மன்றங்கள்,  அரச காரியலயங்கள் இயங்கி வருகின்றபோதும் உத்தியோகத்தர்களின் வரவு குறைவாகவே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை நகரில், தற்காலிகமாக பல சந்தைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X