Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், வடமலை ராஜ்குமார்
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் பல்வேறு வகையான பதவிகளுக்கு, ஆட்சேர்ப்புச் செய்யும்போது சமூகப்பணி டிப்ளோமா புறக்கணிக்கப்படுவதாக, கிழக்கு மாகாண தொழில்வாண்மையான சமூகப்பணியாளர்கள் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஒன்றியத்தின் தலைவர் தில்லையம்பலம் ஹரிஸ்டன் விடுத்துள்ள அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ ஆசிரியர்களுக்கான அண்மையக்கால போட்டிப் பரீட்சை ஆட்சேர்ப்பில், பல டிப்ளோமாக்கள் மேலதிக தகைமைகளாக கொள்ளப்பட்டிருந்தன. குறிப்பாக உளவளத்துனை, நூலக விஞ்ஞானம், விசேட கல்வி போன்றவற்றுக்கான டிப்ளோமா தகைமைகள் கோரப்பட்டுள்ளபோதிலும், முழு நேர டிப்ளோமாவான இருவருடத்துக்கான சமூகப்பணி டிப்ளோமா, ஒரு தகைமையாகக் கோரப்படவில்லை. இப்பாடநெறி, சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் கீழ், இராஜகிரியவில்இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகின்ற டிப்ளோமாவாகும்.
“இந்த டிப்ளோமாவில் உளவளத்துணை அனர்த்த முகாமைத்துவம், சமூக அபிவிருத்தி, சமூகப்பணி , மானிடவாழ்விடங்களில் சேவை வழங்கல், சமூக கொள்கை மற்றும் நலன்புரி, குற்றவியல் நெறிபிறழ்வு, மனித உரிமைகள் உட்பட பல பாடங்கள் உள்ளடக்கப்படுகின்றன. இருந்தபோதிலும் இந்த டிப்ளோமாவை, கிழக்கு மாகாணசபை கருத்திற்கொள்வதில்லை
“மேலும் கிழக்கு பொதுச்சேவை ஆணைக்குழுவால், அண்மைய ஆட்சேர்ப்பின்போது, குடியேற்ற உத்தியோகத்தர் பதவிக்கு விவசாய டிப்ளோமாவும் விளையாட்டு உத்தியோகத்தர் பதவிக்கு விளையாட்டு தொடர்பான டிப்ளோமாவும், நூலகர் சேவைக்கு, நூலக விஞ்ஞானமும் கோரப்படும் அதேவேலை, சமூக சேவை உத்தியோகத்தர் பதவிக்கு சமூகப் பணி டிப்ளோமா தகைமைகளாகச் சேர்க்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
“இவ்விடயம் தொடர்பாக, பல முறை சம்மந்தப்பட்ட மாகாண மத்திய அரசாங்கத்துக்கு அறிவித்திருந்தபோதிலும், எவ்வித நடவடிக்கைகளூம் மேற்கொள்ளப்படாமை குறித்து, கவலையடைகிறோம்.
“எனவே எதிர்காலத்தில் கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் இது தொடர்பான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கு, பட்டதாரிப் பட்டத்துடனாவது, சமூகப் பணி டிப்ளோமாவை கவனத்திற்கொண்டு தகைமைகளாக உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சர், பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் உட்பட மாகாண சமூக சேவைகள் அமைச்சு இது தொடர்பான உயரதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோருகின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago
13 May 2025