Thipaan / 2016 ஜூன் 19 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன் ஆனந்தம்
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் ஏற்பாட்டில், சர்வதேச யோகா தினத்தையொட்டிய பயிற்சி நிகழ்வு, கோணேசபுரியிலுள்ள வளாகத்தில் எதிர்வரும் செவ்வாய்கிழமை (21) நடைபெறவுள்ளதாக, வளாகத்தின் முதல்வர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார்.
காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ள இந்நிகழ்வில், திருகோணமலை நகரத்திலுள்ள பாடசாலைகளின் உயர்தர மாணவர்கள் உட்பட சுமார் 300 பேர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திருமலை வளாகத்தில் முதன்முறையாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இந்நிகழ்வுக்கு கொழுப்பிலிருந்து வருகைதரும் யோகா கலை நிபுணர்கள் பங்கு பற்றி, பல்வேறு நோய்களைக் குணப்படுத்தவல்ல கலைகளை செய்து காட்டவுள்ளனர்.
வரும் ஆண்டில் இன்னும் சிறப்பான முறையிலும் விரிவான முறையிலும் நிகழ்வை நடாத்தவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்நிகழ்வில் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் கே.முருகானந்தம் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
4 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Mar 2026