2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சரித்திர ரீதியான ஆய்வுகள் அவசியம்

வடமலை ராஜ்குமார்   / 2018 ஜூலை 28 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சரித்திர ரீதியான  ஆய்வுகள் நடத்தி, எமது வரலாற்றை ஆவணப்படுத்தி வெளியிடுவது இன்றைய கால கட்டத்தின் மிக முக்கியமான தேவையாகவுள்ளது.

மேலும், திருக்கோணேஸ்வரத்தின் அடிவாரத்தில் உள்ள சமுத்திரத்தில் ஆதிகால திருக்கோணேஸ்வரத்தின் சிதைவுகள் மற்றும் வரலாற்று உண்மைகளும் புதைந்துள்ளது. அதனை வெளிக்கொண்டுவர ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் உள்ளதாக எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் எழுதிய யார் இந்த இராவணன் என்ற நூல்  திருகோணமலையில் நேற்று  (27) வெளியிட்டு வைக்கப்பட்ட போது, இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றும் போது “1624ஆம் ஆண்டு போத்துக்கேயரால் திருக்கோணேஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்ட போது, இவ்வாலயத்தில் ஒரு பகுதியாக இருந்த 1,000 கால் மண்டபத்தை உடைத்தே தற்போதுள்ள பிரட்ரிக் கோட்டை உருவாக்கப்பட்டள்ளதாக தாம் அறிந்துள்ளோம்.

“மேலும், சமுத்திரத்தின் அடியில் ஆலயத்தின் பல சிதைவுகளும் வரலாற்று உண்மைகளும் புதையுண்டு உள்ளது.

“எனவே, இந்த ஆராய்சி சட்டபூர்வமாக இடம்பெறவேண்டும் எனவும் நாம் விரும்புகின்றோம்.

“இராவணன் இலங்காபுரியை ஆண்ட பலம் வாய்ந்த தமிழ் மன்னன். அவர் சிவபொருமானின் தீவிர பக்தனாக இருந்துள்ளார். அதற்கான பல ஆதாரங்கள் உள்ளது. திருக்கோணேஸ்வரத்தின் வலது புறத்தில் உள்ள இராவணன் வெட்டு அதற்கு ஒரு சான்றாகும் என்றார்.

“இராவணன் இலங்கையில் பல சிவாலயங்களை கட்டியது மட்டுமல்லாது இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் சிவாலயங்களை அமைத்துள்ளார். இந்தியா மற்றும் ஏனைய பல நாடுகளில் அவரைக் கடவுளாக வழிபடும் வழக்கமும் காணப்படுகின்றது.

“இராவணன் ஆயுள் வேத வைத்தியத்திலும் கை தேர்ந்தவர் என்றும் வரலாறு கூறப்படுகின்றது. இராமாயணத்தில் இராமன் பற்றி அதிகமாக கூறப்பட்ட போதும் இராவணன் பற்றிய தகவல்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை அந்த குறையை போக்க யார் இந்த இராவணன் என்ற நூல் வெளி வந்துள்ளது என்று நான் கருதுகின்றேன்.

“எனவே, சரித்திர ரீதியான ஆய்வுகள் நடத்தப்பட்டு, உண்மைகள் வெளியிட வேண்டியது அவசியம்.  இவ்வாறான ஒரு சரித்திர ரீதியான ஆய்வு நூலை வெளிட்ட நூலாசிரியர் என.கே.எஸ்.திருச்செல்வத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .