2025 மே 19, திங்கட்கிழமை

சவூதியில் கிண்ணியா பெண் உயிரிழப்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

சவூதி அரேபியாவில் பணிப் பெண்ணாக பணி புரிந்து வந்த கிண்ணியாவைச் சேர்ந்த  பெண்ணொருவர் இன்று புதன்கிழமை (07) காலை உயிரிழந்துள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கிண்ணியா நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த ஐயூப் மாஹீல் என்பவரின் மனைவி நபீலா உம்மா (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவருக்கு இறுதியாக வாந்தி ஏற்பட்ட பின்னர் சுகயீனம் அடைந்ததாகவும் அதன் பின்னரே அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இவர் ஹஜ் பெருநாளுக்காக இலங்கைக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்துக்கொண்டிருந்தார் என்றும் குடும்பத்தார் தெரிவித்தனர்.

இவரது ஜனாசாவை சவூதியில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X