2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சஹாயபுரம் மீற்குடியேற்ற மக்களுக்கு வசதிகள் இல்லை

தீஷான் அஹமட்   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் சஹாயபுரம் மீள்குடியேற்ற கிராம மக்கள், பல்வேறு அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த கால யுத்தம் காரணமாக, 2006ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்ற இவர்கள்,  மட்டக்களப்பிலுள்ள நலன்புரி முகாம்களிலிருந்து, பின்னர் 2008ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டர்.

தற்போது, இக்கிராமத்தில் 112 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் வசிப்பதோடு, பலர் வீடுகள் இன்றி தற்காலிகக் குடிசைகளில் வசித்து வருகின்றனர். அத்துடன், மின்சாரம், மலசலகூடம், வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் இக்கிராமத்தில், பாடசாலையொன்று இல்லையென்றும் போக்குவரத்து வசதியில்லாமல் இருப்பதால், கிராமத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல கிலோமீற்றர் தூரம் நடந்துசென்று இருதயபுரம் வித்தியாலயத்துக்குச் செல்ல வேண்டிய நிலையும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

என​வே, இந்த கிராமங்களின் அடிப்படை வசதிகள் குறித்து, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .