Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அப்துல்சலாம் யாசீம் / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிகிச்சைக்குச் சென்ற பெண் நோயாளியை வன்புணர்வுக்கு உட்படுத்திய வைத்தியருக்கு எதிராக, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், நேற்று (12) மாலை பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு, கந்தளாய் ஆயுர்வேத சிகிச்சை நிலையத்துக்கு கிச்சைக்கு சென்ற பெண் நோயாளியை வன்புணர்வுக்கு உட்படுத்திய ஆயுர்வேத வைத்தியரும் அதற்கு உடந்தையாக இருந்த வைத்தியரின் உதவியாளராகக் கடமையாற்றிய பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டு, திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் தொடர் விசாரணைகளுக்கும் ஆயுர்வேத வைத்தியர், நீதிமன்றத்தில் முன்னிலையாகி வந்த நிலையில் இம்மாதம் 05ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படுமென, திருகோணமலை மேல் நீதிமன்றம் அறிவித்தது.
இதனையடுது, குறித்த வைத்தியர், தீர்ப்புக்கு முன்னிலையாகாது தலைமறைவாகினார்.
அதன்பின்னர், நேற்று (12) தீர்ப்பு வழங்கப்படுமென, நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், குறித்த வைத்தியரைக் கைதுசெய்ய அவரது சொந்த ஊரான குருநாகல் பிரதேசத்துக்கு பொலிஸார் சென்றபோது, அவர் அங்கிருந்தும் தலைமறைவாகியுள்ளார்.
மேற்படி ஆயுர்வேத வைத்தியரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், 15 ஆண்டுகள் கடூழியச் சிறை தண்டனையையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் தீர்ப்பளித்தார்.
அத்தோடு, குறித்த வைத்தியரின் பெண் உதவியாளருக்கு, 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுடன், தலைமறைவாகியுள்ள வைத்திய அதிகாரியைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழு அமைத்,து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, கிழக்கு மாகாண பொலிஸ் மா அதிபர், திருகோணமலை பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, கைது செய்யும் பிடியாணை, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வைத்தியர் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்துக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறும், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.
43 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
51 minute ago