2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சிறுநீரக நோயாளர்களுக்கு கொடுப்பனவு இல்லையென விசனம்

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஒக்டோபர் 25 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை, மொறவெவ பிரதேசத்தில் சிறுநீரக நோயாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படுவதில்லையென பாதிக்கப்பட்ட நோயாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

 

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அந்நோயாளர்கள் சிகிச்கைக்காக திருகோணமலை-வவுனியா போன்ற வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்ற போதிலும்  மொறவெவ பிரதேச செயலகத்தால்  கொடுப்பனவுக்கான விண்ணப்பப்படிவங்கள் நிராகரிக்கப்படுவதாகவும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தால் சிறுநீரக நோயாளர்களுக்குக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாக ஊடகங்கள் மூலமாக தெரிவிக்கப்பட்டு வரும் வேளையில், நோயாளர்கள் சிகிச்சைகளுக்காக செல்வதற்குக் கூட வசதி இல்லாமல் வீட்டிலேயே கிடப்பதாகவும் இந்நோயாளர்களை வீடுகளுக்கு சென்று சோதனைகளையும் அறிவூட்டல்களையும் வழங்கி வருவதாகவும் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, கோமரங்கடவெல-பதவிசிறிபுர பிரதேசங்களைச் சேர்ந்த நோயாளர்களுக்குக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதுடன்,  மொறவெவ பிரதேசம் அரசாங்கத்தால் சிறுநீரக நோயாளர்கள் காணப்படும் பிரதேசமாக இணங்காணப்படாமையாலேயே கொடுப்பனவுகள் வழங்க முடியாத நிலையில் இருப்பதாக மொறவெவ பிரதேச செயலகத்தின் அதிகாரியொருவர்  தெரிவித்தார்.

அத்துடன், மொறவெவ பிரதேசத்தில் ரொட்டவெவ, மஹதிவுல்வெவ மற்றும் தெவனிபியவர பகுதகளைச் சேரந்த 40க்கும் மேற்பட்ட நோயாளர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் மொறவெவ பிரதேச செயலக சமூக சேவைகள் திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்தார்.

எனவே, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கமும் அரச திணைக்களமும் கூடிய கவனம் எடுக்க வேண்டுமென நோயாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X