2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிகளில் குறைபாடுகள்

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில், சிறுநீரக நோயாளிகள், 1,171 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தால் அவர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் உதவித்தொகை, 765 பேருக்கு மாத்திரமே வழங்கப்படுவதாகத் தெரியவருகின்றது.

பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளர்களும், அவர்களது விண்ணப்படிவங்களை, கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக, பிரதேசச் செயலகங்களுக்கு அனுப்பி வைத்திருந்த போதிலும், 765 பேருக்கு மாத்திரமே, இந்த 5,000 ரூபாய் நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளது எனத் தெரியவருகின்றது.

இதேவேளை, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் வீடுகளைத் திருத்துவதற்கும், புதிய வீடுகளை அமைத்துக்கொள்வதற்கும் மானி அடிப்படையில் கடன்கள் வழங்கப்படுவதாகவும் இந்தக் கடனுக்கு விண்ணப்பித்த 147 பேரில், 78 பேருக்கு மாத்திரமே, இந்தக் கடன் தொகை கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .