Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சிறுபோக நெல் அறுவடை அமோகமாக நடைபெற்றுவருகின்றது.
கடும் வரட்சிக்கு மத்தியிலும் குளத்து நீரை நம்பி செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கை, நல்ல விளைவை தருவதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஏக்கரொன்றிலிருந்தோ 30 முதல் 35 நெல் மூடைகள் அறுவடை பெறப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நெல் அறுவடை செய்யும் அறுவை இயந்திரம் மூலம் பரவலாக அறுவடை இடம்பெறுகிறது. ஏக்கரொன்றுக்கு அறுவடைக்கூலியாக 6,000 ரூபாய் இயந்திரம் மூலம் அறுவடை மேற்கொள்ள செலவாவதாகவும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
அறுவடை தொழிலாளர் மூலம் அறுவடை செய்ய ஏக்கரொன்றுக்கு 10,000 ரூபாய் செலவாவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். அனேகமாக இயந்திரம் மூலம் அறுவடை மேற்கொள்வதையே காண முடிகிறது.
இதேவேளை, நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் அதிகளவான நெல் அறுவடை செய்யும் இயந்திரங்கள் இப்பிரதேசங்களில் வந்து குவிந்திருக்கின்றமையினால், அறுவடைத் தொழிலாளர்கள் தொழில்களின்றிப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும், அறுவடை இடம்பெறும் இடத்துக்கு தனியார் வியாபாரிகளை வந்து விவசாயிகளிடம் நெல்லைக் கொள்வனவு செய்கிறார்கள். 1 மூடை நெல், 2,700 ரூபாய் முதல் 2,800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago