2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சிறுமிக்கு ஆபாச வீடியோ காட்டிய மாமா கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஒக்டோபர் 26 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, ரொட்டவெவ பகுதியில்  16 வயதுடைய தனது மருமகளை, முச்சக்கர வண்டியில் அழைத்துச்  சென்று இரவில் தனது வீட்டில் தூங்க வைத்து ஆபாச வீடியோக்களைக் காண்பித்த மாமனார், இன்று (26) காலை கைதுசெய்யப்பட்டுள்ளாரென, மொறவெவ  பொலிஸார் தெரிவித்தனர்.

 

அதே இடத்தைச் சேர்ந்த  42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து  தெரியவருவதாவது,

ரொட்டவெவ பகுதியில் உள்ள அம்மம்மாவின் வீட்டுக்கு வருகை தந்திருந்த போது, அவ்வீட்டிலுள்ள சிறார்கள் இருவருக்குமிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து,  அவ்வீட்டுக்கு வருகை தந்த மாமனார், சண்டை பிடிக்க வேண்டாம் என்று கூறி, தாயார் இருக்குமிடத்துக்கு அழைத்துச் செல்கின்றேன் என சிறுமியை அழைத்துச்சென்று, அவரது வீட்டில் உறங்க வைத்து, ஆபாச வீடியோக்களைக் காண்பித்து, இன்று காலை 5 மணியளவில் தயார் வீட்டுக்கு அனுப்பியுள்ளார் எனத் தெரியவருகின்றது.

இதேவேளை, இந்த நேரத்தில் எங்கிருந்து வருகின்றாய் எனத் தாயார் வினவியபோது, இரவு நடந்த சம்பவங்களைச் சிறுமி கூறியதாகவும் அதனையடுத்து,  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்ததாகவும் தெரியவருகின்றது.

இச்சம்பவம் குறித்து  மாமனாரைக் கைதுசெய்துள்ள மொறவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X