2025 மே 14, புதன்கிழமை

சிறுமியை அழைத்துச் சென்றவருக்கு மறியல்

Editorial   / 2017 ஜூலை 01 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுடைய சிறுமியொருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் வாகரைப் பகுதியில் அழைத்துச் சென்று வைத்திருந்த இளைஞரை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான், இன்று (01) உத்தரவிட்டார்.               

புண்ணையடி- ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.                            

குறித்த இளைஞருக்கும் சிறுமியும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாகவும் சிறுமியை, யாருக்கும் தெரியாமல் வாகரை பகுதிக்கு அழைத்துச் சென்று இளைஞரின் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில், சிறுமியின் பெற்றோர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய, இளைஞரை நேற்று (30) இரவு பொலிஸார் கைது செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .