2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சிறையில் மரங்கள் நாட்டி வைப்பு

எப். முபாரக்   / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தை  முன்னிட்டு, திருகோணமலை சிறைச்சாலையில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கும் நிகழ்வு, திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் ரஜிவ சிறிமால் சில்வா தலைமையில் இன்று (12) நடைபெற்றது.

சிறைச்சாலை வளாகத்தினை அண்மித்த பகுதியில் மா, கொய்யா, கருவேப்பிலை, முருங்கை போன்ற மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் சஞ்ஜீவ, சிறைச்சாலை புனர்வாழ்வு அதிகாரிகள் உட்பட சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X