அப்துல்சலாம் யாசீம் / 2018 ஜூலை 14 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றினுள் அனுமதியின்றி உள் நுழைந்து பாலியல் சேட்டை செய்த சிவில் பாதுகாப்பு உத்தியோத்தரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மொறவெவ பொலிஸ் பிரிவிலுள்ள தெவனிபியவர பகுதியிலே இச்சம்பவம் நேற்று முன்தினம்(12) இரவு இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஐந்து பிள்ளைகளின் தந்தை (வயது 43) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர், பெண்னொருவர் தனிமையில் இருந்தபோது இரவு நேரத்தில் அனுமதியின்றி வீட்டுக்குள் நுழைந்து பாலியல் சேட்டை செய்ததாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்தே, சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை, நேற்று(13) திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவரை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .