Editorial / 2020 மே 11 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்
திருகோணமலை - கந்தளாய் சீனி ஆலைப் பகுதியில் நேற்று (10) இரவு காட்டு யானைகள் கட்டடங்களைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக, அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் சீனி ஆலைக்குச் சொந்தமான கட்டடங்களையே, காட்டு யானைகள் இவ்வாறு உடைத்துள்ளதாகவும், யானை வேலிகள் அமைக்கப்பட்டிருந்தும் அவற்றையும் கடந்து வந்து இவ்வாறு அட்டகாசம் புரிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாகவும் கடந்த வாரமும், இப்பகுதியில் அமைந்துள்ள மூன்று வீடுகளை, காட்டு யானைகள் சேதமாக்கியிருந்ததாகவும், பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, சீனித் தொழிற்சாலைக்குரிய வளங்கள், பாவனைகள் இன்றி, பற்றைக் காடுகளாகி தூர்ந்து போயுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago