Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 04 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், அ. அச்சுதன், அப்துல்சலாம் யாசீம்
எதிர்வரும் வாரம் மிகுந்த அவதானம் மிக்க காலமாக இருப்பதால் அரசாங்கம், சுகாதாரத்துறை விடுக்கும் அறிவுறுத்தல்களைக் கூடிய கரிசனையுடன் பின்பற்றுமாறு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன வேண்டுகோள் விடுத்தார்.
பிரதேச செயலாளர்களுடனான நேரடி காணொளி மூலமான விசேட கலந்துரையாடலை, மாவட்ட அரசாங்க அதிபர், நேற்று (03) மேற்கொண்டார். இதன்போதே அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்தார்.
இதேவேளை, பிரதேச செயலக ரீதியாக, ஊரடங்குச்சட்டம் நிலவுகின்ற போதும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை அறிவுறுத்துமாறும் சில பிரதேசங்களில் மக்கள் பொறுப்பற்ற தன்மையோடு வெளியில் வந்து நடமாடுவதாகத் தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இச்செயற்பாடு இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஆரோக்கியமாக அமையாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதுவரை திருகோணமலை மாவட்டம், கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருக்கின்றது. இதனை தொடராக பாதுகாக்க அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும் என்றும் அவர் கோட்டுக்கொண்டார்.
அத்துடன் கடமைகளை நிறைவேற்றும்போது, தமது பாதுகாப்பையும் தமது ஊழியர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தத்தம் பிரிவுகளில் மக்களுக்கு அவசியமான உணவுப்பொருள் இருப்பைப் பேண உரிய பிரதேசத்தில் உள்ள பல நோக்குக் கூட்டுறவுச்சங்கங்கள், வர்த்தகர்களுக்கு அறிவுறுத்துமாறும் அத்தியவசியத் தேவைகளுக்கு மாத்திரம் வாகன அனுமதிபத்திரங்களை மக்களுக்கு வழங்குமாறும் இதன்போது அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்களை வேண்டிக்கொண்டார்.
இந்த விசேட நேரடி காணொளி உரையாடலில், திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றும அனைத்து பிரதேச செயலாளர்களும் இணைந்திருந்தனர்.
11 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago