2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சுய தனிமைப்படுத்தலை 70 குடும்பங்கள் நிறைவு செய்தன

Editorial   / 2020 மே 11 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

திருகோணமலை - கந்தளாய்  பிரதேசத்தில், சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 70 குடும்பங்களுக்கு  சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், 70 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று (10) அவர்களுடைய தனிமைப்படுத்தலுக்கான நாள் நிறைவுற்ற நிலையில், பொதுச் சுகாதார பரிசோதகர், அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி, தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளார்.

கந்தளாய் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளரான கடற்படை சிப்பாய்யொருவர் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பு வைத்திருந்த நபர்களே, இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X