2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சுயத்தொழில் உதவிக் கொடுப்பனவுகள் வழங்கல்

Editorial   / 2019 ஜூலை 26 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.எல்.நௌபர்

 

சிரேஷ்ட பிரஜைகளுக்கான தேசிய செயலகத்தால் வழங்கப்படுகின்ற, முதியோர்களுக்கான மானிய அடிப்படையிலான சுயத்தொழில் உதவிக்கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு, திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்தில், இன்று (26) நடைபெற்றது.

உணவு தயாரித்தல், சிறு கைத்தொழில், வீட்டுத்தோட்டம் உள்ளிட்ட   சுயதொழில்களை மேற்கொள்வதற்கு வசதியாக, தெரிவுசெய்யப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு, தலா 20,000 ரூபாய் வீதம் 8 பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திருமதி  அபேரத்ன, நிர்வாக உத்தியோகத்தர் குருகுல சூரிய, முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் த.கலைக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .