Editorial / 2020 மே 10 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக், ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 வயதுச் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், அவரது சகோதரர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (10) இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில், கிண்ணியா, மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த றனீஸ் சான் ஹனி எனும் சிறுவனே உயிரிழந்துள்ளதாகவும் காயமடைந்துள்ள 2 வயதுச் சிறுவன் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனின் மரணம் தொடர்பில், கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி கே. டி. நெஹ்மத்துல்லாஹ், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வீடொன்றின் அருகாமையில் உள்ள வீடொன்று பழைய நிலையில் காணப்பட்டுள்ளது. சிறுவன் அதனை அண்டிய பகுதியில் விளையாடிக் கொண்டிருக்கையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில், கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago