Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 29 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத், வடமலை ராஜ்குமாா், எஸ்.சசிகுமார்
திருகோணமலையில், “செமட்ட செவண” 99 மற்றும் 100 வது மாதிரிக் கிராமங்களை வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று (29) திறந்து வைத்தார்.
திருகோணமலை பட்டடணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாங்கயூற்றில் நிர்மாணிக்கப்பட்ட தெட்ஷணாபுரம் மற்றும் கையாலயபுரம் ஆகிய மாதிரிக் கிராமங்களிலேயே இவ் வீடமைப்புத் திட்டம் திறந்து வைக்கப்பட்டன.
இந்த இரண்டு கிராமங்களிலும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரவேசப் பாதை , உள்ளகப் பாதை நீர் மற்றும் மின்சாரம் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் 47 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன்போது, தெட்ஷணாபுரம் மாதிரிக் கிராமத்தில் 25 குடும்பங்களுக்கும் கைலாசபுரம் மாதிரிக் கிராமத்தில் 22 குடும்பங்களுக்கும் வீட்டு உரிமைப் பத்திரம் வழங்கப்பட்டது..
சொந்துறு பியச கடன் திட்டத்தின் கீழ் 75 பயனளிகளுக்கு 150 இலட்சம், விசிறி கடன் திட்டத்தின் கீழ் 200 பயனாளிகளுக்கு 200 இலட்சம், வீடமைப்புக்கு மானியமாக 200 பயனாளிகளுக்கு 100 இலட்சம், வீடமைப்புக்கு கடனாக 75 பயனாளிகளுக்கு 375 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளும் வழங்கப்பட்டன.
இதுதவிர, சில்ப சவிய திட்டத்தின் கீழ் பயிற்சியளிப்பதற்காக 50 பயிலுநர்களுக்கு 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான செயற்றிட்டங்கள் முன்வைக்கப்பட்டதோடு, கண் பார்வை குறைந்தவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .