Editorial / 2018 பெப்ரவரி 21 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலையில், “தென்கயிலை கதிர்காமம்” என்று அனைவராலும் வணங்கப்படுகின்ற பாலையூற்று ஸ்ரீ பாலமுருகன் தேவஸ்தானத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) காலை 07 மணி முதல் 08 மணிவரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் பாம்பன் அருட்சித்தர் தவத்துக்கு சஜ்ஜீவிராஜா சுவாமிகளின் அருட்கரங்களால் ஸ்ரீ சத்ரு சம்கார ஞானவேல் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இலங்கையில் முதல் முறையாக இலங்கை மற்றும் இந்தியாவின் தலைசிறந்த வேத பண்டிதர்களைக் கொண்டு, பலசித்த வனங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட அபூர்வ 10,008 காய கல்ப மூலிகைகளை கொண்டு, ஸ்ரீ சத்ரு சம்கார ஞான வேள்வியும் நடைபெறவுள்ளது.
முதல் நாளான சனிக்கிழமை (24) காலை 06 மணிக்கு, ஸ்ரீ மஹா கணபதி ஹோமம் இடம்பெற்று மாலை 04 மணிக்கு, ஸ்ரீ நவக்ரஹ ஹோமமும் இடம்பெறும்.
8 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
15 Dec 2025