2025 மே 01, வியாழக்கிழமை

டிஜிட்டல் கணினி ஆய்வு கூடம் திறந்துவைப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், ஏ.எம்.கீத்

திருகோணமலை, கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட டிஜிட்டல் கணினி ஆய்வு கூடத் திறப்பு விழா, பாடசாலை அதிபர் பா.தேவராஜா தலைமையில், இன்று (04) நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கலந்து கொண்டார். ஏனைய அதிதிகளாக, மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஹாஸீம், கிண்ணியா நகரபிதா கே.எம்.நளீம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்

டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அமைச்சால் ​அமைக்கப்பட்ட இவ் ஆய்வு கூடத்துக்கு 11 மடிக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .