தீஷான் அஹமட் / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சம்பூர், கட்டைபரிச்சான் ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளில் டெங்கு பரவும் வகையில் காணப்படும் வீடுகள், பொது இடங்கள், நேற்று (23) சோதனையிடப்பட்டதாக, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வை.எம்.ஜெஸ்மி தெரிவித்தார்.
இதன் போது, டெங்கு நோய் பரவுவதற்கு ஏதுவான முறையில் சுற்றாடலை வைத்திருந்தோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, ஆலோசனைகளும் வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இச் சோதனை நடவடிக்கையில் , பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், கடற்படையினர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .