Editorial / 2018 மார்ச் 25 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பொன்ஆனந்தம்;)
திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கவுள்ள டெங்கொளிப்பு வாரத்திற்கு, பல்வேறு அரச மற்றும் அரசசாரா அமைப்புக்களின் பங்களிப்பு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடந்த கூட்டத்தில் இதுபற்றிய விரிவான அறிக்கையை மாவட்ட பிராந்திய சுகாதாரத் திணைக்களம் வழங்கியுள்ள நிலையில், வரும் ஏப்பிரல் 3ஆம் திகதியிலிருந்து டெங்குகொளிப்பு வாரம் அனுஸ்டிக்கப்படவுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக அரச திணைக்களங்கள் பாரிய பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெங்கு தொற்றைப் பொறுத்தவரை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைவடைந்திருந்தாலும், இன்னும் மிகக் கவனத்துக்குரிய சூழலே நிலவுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில், கடந்த மூன்று மாதங்களில், 206 டெங்கு தொற்றுச் சம்பந்தமான விபரங்கள் கிடைக்கப் பெற்றிருப்பதுடன், 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், அந்த ஆண்டை விட அதிகம் என்று அறியப்படுகிறது.
எனவே தொடர்ந்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார திணைக்களத்தின் புள்ளி விபரங்களின்படி, இந்த தாக்கம் 25 தொடக்கம் 45 வயதானவர்களையே அதிகம் தாக்கியுள்ளதாகவும், குறிப்பாக இவர்கள் தொழிலுக்காக செல்லும் இடங்களிலேயே இந்த தாக்கம் வந்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
எனவே முக்கியமாக கட்டுமானங்கள் இடம்பெறும் இடங்களில் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என சுகாதாரத்திணைக்களம் வேண்டுகொள்விடுத்துள்ளதுடன், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 12 பொதுச்சுகாதாரப் பிரிவுகளில் 6 பிரிவுகள் அவதானத்திற்குரிய இடங்களாக கணிக்கப்பட்டபோதும், திருகோணமலை நகரம் மேலும் அவதானத்திற்குரிய பிரதேசமாக இன்னும் கணிக்கப்பட்டுள்ளன எனவும் மேற்படி கூட்டத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
வரும் எப்பிரல் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டெங்கு கட்டுப்படுத்தல் வாரத்தில் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் சகல பிரிவுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
26 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
26 minute ago
37 minute ago