Editorial / 2018 மார்ச் 27 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார், எப்.முபாரக்
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 36 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமான நிகழ்வு, திருகோணமலை நகரசபையின் நகர மண்டபத்தில் நாளை (28) காலை 9 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இந்த சத்தியப்பிரமான நிகழ்வு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளையின் தலைவர் சி.தண்டாயுதபாணி தலைமையில் இடம்பெறவுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் வட்டார அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 33 உறுப்பினர்களுக்கும் விகிதாசார அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 03 உறுப்பினர்களுக்குமாக, மொத்தம் 36 உறுப்பினர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் குகதாசன், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களில் 10 உள்ளூராட்சி மன்றங்களில் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்யிட்டு, 9 உள்ளூராட்சி மன்றங்களில் தமது உறுப்பினர்களைத் தெரிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
19 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
19 minute ago
22 minute ago