Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஜூலை 18 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை, வெல்கம் விஹாரை பகுதியில், சட்ட விரோதமாக ரி -56 துப்பாக்கியொன்றையும் கட்டுத்துவக்கொன்றையும் தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரொருவரை, நேற்றிரவு (17) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், வெல்கம் விஹாரை வீதியைச் சேர்ந்த கொடித்துவக்கு ஆராய்ச்சிலாகே சுரத்திமல (31 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உப்புவெளி பொலிஸ் நிலையத்துக்கு நேற்று மாலை கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு சென்று சோதனையை மேற்கொண்டபோதே, துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் முன்னாள் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .