2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கி ரவைகள் மீட்பு

Thipaan   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலநகர் பகுதியில் , நேற்றுப் புதன்கிழமை (21) மாலை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, ரீ 56 ரக துப்பாக்கிக்குக் பயன்படுத்தும் 410 ரவைகளும்  84 எஸ் ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் 14 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.

பாலநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் மதில் கட்டுவதற்காக, மதில் தோண்டிய போது சந்தேகத்துக்;கிடமான பையொன்று இருப்பதை கண்டு வீட்டு உரிமையாளர், மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த இடத்துக்;கு விரைந்த பொலிஸார் இந்தத் துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X