Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூலை 27 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் உப்பூறல் பகுதியில், காணித் தகராறு காரணமாக இரண்டு சிறுபான்மை குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைககலப்புச் சம்பவத்துடன் தொடர்புதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிராம சேவையாளரை,1 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்ல மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், செவ்வாய்க்கிழமை (26) உத்தரவிட்டார்.
அத்துடன், ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
காணித் தகராறு காரணமாக இரண்டு சிறுபான்மைக் குழுக்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமையன்று (16) இடம்பெற்ற கைககலப்புச் சம்பவத்தில், இருதரப்பிலும் அறுவர் காயங்களுக்குள்ளான நிலையில் மூதூர் சேருநுவர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் இச்சம்பவம் குறித்து சேருநுவர பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், இக்கைகலப்பு சம்பவம் இடம் பெறுவதற்கு உப்பூறல் கிராம சேவையாளரே காரணமாக இருந்ததாக இக்கைககலப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சிறுபாண்மை குழுவொன்று, சேருநுவர பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தது.
இதன் அடிப்படையில், குறித்த கிராம சேவையாளரை, கடந்த வெள்ளிக்கிழமை (22) மூதூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சேருநுவர பொலிஸார் கேட்டுக் கொண்டதற்கமைய, அவர், மூதூர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது, அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவு பிறப்பிக்கப்பிக்கப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை (26) ஆஜர்படுத்திய போதே, நீதவான், அவரைப் பிணையில் செல்ல அனுமதித்தார்.
24 minute ago
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
25 minute ago
1 hours ago