2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தாபரிப்பு பணம் செலுத்ததாதவர் விளக்கமறியலில்

Niroshini   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எப்.முபாரக்                   

திருகோணமலையில் இரண்டு பிள்ளைகளுக்கு தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்த ஒருவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம்.அப்துல் முஹித் ஞாயிற்றுக்கிழமை(27)உத்தரவிட்டார்.                                                 

திருகோணமலை கன்னியா பகுதியைச் சேர்ந்த நடராசா சுசிகரன் (வயது 48) என்பவருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் உள்ள பெண்ணொருவரை திருமணம் முடித்து இரண்டு குழந்தைகள் கிடைத்தவுடன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு எற்பட்டு தலைமறைவாகியுள்ளார்.

குறித்த நபர் இரண்டு குழந்தைகளுக்கும் மாதாந்தம் நான்காயிரம் ரூபாய் தாபரிப்பு பணம் செலுத்தி வந்த நிலையில், எட்டு மாதங்களாக தாபரிப்பு பணம் செலுத்தாது இருந்ததால் அவரது மனைவி திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து குறித்த நபரை சனிக்கிழமை(26)மாலை திருகோணமலை பொலிஸார் கைது செய்து, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.         

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X