2025 மே 17, சனிக்கிழமை

தாய்ப்பால் புரையேறி சிசு உயிரிழப்பு

Thipaan   / 2016 நவம்பர் 12 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், தாய்ப்பால் புரையேறி 50 நாட்களேயான சிசுவொன்று, இன்று (12) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிசு, இன்று அதிகாலை தூக்கத்தில் அழுது கொண்டிருந்த போது, தாய் பால் கொடுத்துள்ளார். இதன்போது, பால் புரைக்கு ஏறியதாகவும் விரைவாக கோமரங்கடவெல வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போது, சிசு உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

சிசுவின் சடலம் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சிசு குறை மாதத்தில் பிறந்ததாகவும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தாயின் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .