2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

திருகோணமலையில் டெங்கு தீவிரம்

Kogilavani   / 2017 மார்ச் 07 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலையில் டெங்கு நோயால், நாள் ஒன்றுக்கு 100 பேர் பொது வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயினும், வைத்தியசாலையில் போதுமான இடவசதி, ஆளனி மற்றும் படுக்கைகள் இல்லாதுள்ளதாக, திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி அனுசியா ராஜ்மோகன் தெரிவித்தார்.

டெங்கு நோய் பரவக்கூடிய இடங்களில், பொது அமைப்புக்களின் உதவியுடன் சேவை அடிப்படையிலான சிரமதான நடவடிக்கைகளை மேற்கொண்டு, டெங்கு நோய் பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு கட்டுப்படுத்த வேண்டுமென்றும், இதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அக்குழுவுக்கானத் தேவைகளை, மாவட்டதொண்டர் அமைப்புக்கள் மற்றும் ஆலயங்களின் நிதி அனுசரணையுடன் பூர்த்தி செய்வதெனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் விதத்தில், வீதி நாடகங்களை ஏற்பாடு செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .