Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2016 ஜூலை 18 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாயில் திருட்டு மோட்டார் வாகன உதிரிப்பாகங்களை விற்பனை செய்த நபரை, இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் எச்.ஜி.தம்மிக்க, நேற்று ஞாயிற்றுக்கிழமை(17) உத்தரவிட்டார்.
தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த சந்தேகநபர், மோட்டார் வாகன உதிரிப்பாகங்களை வேறு பகுதிகளில் இருந்து திருடி கந்தளாய் பகுதிக்குச் கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளார்.
இது தொடர்பில், பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்நபரை சனிக்கிழமை(16) கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவரை, கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று (17) ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .