2025 ஜூலை 31, வியாழக்கிழமை

திருமலையில் ஊடக கற்கை நெறி

Gavitha   / 2016 ஜூலை 16 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

திருகோணமலையில் எதிர்கால இளம் ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்கில், ஊடக கற்கை நெறி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஓ .எம்  சர்வதேச தொண்டு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் வொய்ஸ் ஒப் மீடியா நெட்வேக் நிறுவனமானது இந்தப் பயிற்சி நெறியை ஆரம்பித்துள்ளது.

டிப்ளோமா கற்கை நெறியான இந்தப் பயிற்சியானது, திருகோணமலையில் உப்புவெளியில் அமைந்தள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பயிற்சி நிலையத்தில் நாளை ஞாயிறுக்கிழமை (17) ஆரம்பிக்கப்படவுள்ளது.

'தொடர்ச்சியாக விடுமுறை தினங்களில் முன்னெடுக்கப்படும் இந்த பயிற்சியின் விரிவுரைகளில், பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் ஆகிய ஊடகங்களில் பணியாற்றக்கூடிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது' என்று  வொய்ஸ் ஒப் மீடியா நெட்வேக் நிறுவனத்தின் பணிப்பாளர் அருள் சஞ்சித் தெரிவித்தார்.

மேலும் அடுத்த கட்ட பயிற்சிக்கான மாணவர்கள் தெரிவு விரைவில் இடம்பெறவுள்ளதால், இப்பயிற்சியில் இணைந்துக் கொள்ள விரும்புவோர், 0766375211 அல்லது 0778363531 என்ற அழைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி மேலதிக விவரங்களை தெரிந்துக்கொள்ள முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .