Suganthini Ratnam / 2017 மே 07 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன் ஆனந்தம்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொல்பொருட்கள் மற்றும் ஆவணங்களைத் தந்துதவுமாறு பொதுமக்களிடம் திருகோணமலை வளாக முதல்வர் வல்லிபுரம் கனகசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வளாகத்தில் சுமார் 320 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தொகுதி இம்மாதம் 19ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.
அக்கட்டடத்தொகுதியில் தொல்பொருள் ஆவணக் காப்பகமும் ஈ நூலகமும் இயங்கவுள்ளன. அத்துடன், அக்கட்டடத்தொகுதியில் ஆய்வு செய்யப்பட்ட ஆவணத்தொகுதிகளை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
இந்த ஆவணக் காப்பகத்தில் வைப்பதற்கான தொல்பொருட்களை வழங்குபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
33 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
3 hours ago